×

கடலில் நிறுத்திய படகு எரிந்து நாசம்

ராமநாதபுரம்: மண்டபம் கடலில் நிறுத்தியிருந்த விசைப்படகு இரவில் எரிந்து நாசமானது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கோயில் வாடி கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 77 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் கடலுக்கு சென்றன. கரை திரும்பிய படகுகள் இன்று வார ஓய்வு நாள் என்பதால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், கடற்கரையில் இருந்து சற்று தூரத்தில் நிறுத்திய படகு ஒன்று நேற்றிரவு 8:30 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது பற்றி தகவலறிந்த மீனவர்கள், நாட்டுப்படகில் சென்று தீயை அணைக்க முயன்றனர். அரை மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது. படகிலிருந்த மின்கல வயர் உரசியதில் தீப்பற்றி எரிந்திருக்க கூடும் என மீனவர்கள் கூறினர். தீ விபத்தில் படகிலிருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது. தங்கச்சிமடம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான படகு என தெரிந்தது. தீப்பற்றி எரிந்த படகின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என தெரிகிறது. இது குறித்து மண்டபம் மீன்வளத்துறை, மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர். …

The post கடலில் நிறுத்திய படகு எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Mandapam ,Ramanathapuram District ,Mandapam Temple Wadi beach ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...